கோவிட் -19 பெருந்தொற்று நோய் உலகளாவிய அளவில் சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்துவதற்கான அவசரத் தேவையை தெளிவுப்படுத்தியுள்ளது.
தி ஸ்டேட் ஆஃப் தி வேர்ல்ட்ஸ் நர்சிங் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, சுகாதாரப் பணியாளர்களின் மிகப்பெரிய அங்கத்தைப் பற்றி ஆழமாகப் விளக்குகிறது.
உலகம் முழுவதும் செவிலியர் படிப்பில் முதலீடு செய்வதற்கான முன்னுரிமை வழங்கவும், நர்சிங் கல்வியை வலுப்படுத்தவும், வேலை வாய்ப்பு, பணியாளர்கள் போன்றவற்றில் உள்ள இடைவெளியை இந்த அமைப்பு அடையாளம் காண்கிறது.
உலக சுகாதார ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் செவிலியர்கள். இவர்கள் சுகாதார அமைப்பில் முக்கிய சேவைகளை செய்கிறார்கள். காலம் காலமாக உலகில் அச்சுறுத்தும் நோய்கள் பரவும்போதும், பெருந்தொற்று நோய்களை எதிர்த்துப்போராடுவதிலும் செவிலியர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
உலகெங்கிலும் கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதில் செவிலியர்கள் இரக்கத்துடனும், தைரியத்துடனும், துணிச்சலுடனும் செயல்பட்டுவருகின்றனர். இதற்குமுன் இவர்களது முக்கியத்துவம் இந்த அளவுக்கு நிரூபிக்கப்படவில்லை. அனைத்து சுகாதாரப் பணிகளிலும் செவிலியர்கள் முதுகெலும்பாக உள்ளனர்.
அந்த வகையில் இன்று ஏராளமான செவிலியர்கள் கோவிட்-19க்கு எதிராக போராடுவதில் முன்னின்று செயல்படுகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் மருத்துவர் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
இது செவிலியர்களின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதற்கும் உலகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்குமான அழைப்பு.