ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதுடன், அம்மாநிலத்தை மத்திய அரசு இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இந்நிலையில் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களான மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா,ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “எவ்வித குற்றச் செயலிலும் ஈடுபடாத நிலையில், ஜம்மு காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்களும், அம்மாநில முன்னாள் முதலமைச்சர்களும் கடந்த ஆறு மாதங்களாகச் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.