தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீனாவுக்கு பதிலடி தருவீர்களா மோடி? - பிரதமரிடம் கேள்விகளை அடுக்கும் சிவசேனா எம்.பி - மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்

மும்பை : ”லடாக் எல்லைப் பகுதியில் சீனா நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி தருவீர்களா?” என சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமரிடம் கேள்விகளை அடுக்கும் சிவசேனா எம்.பி
பிரதமரிடம் கேள்விகளை அடுக்கும் சிவசேனா எம்.பி

By

Published : Jun 17, 2020, 1:23 PM IST

இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே லடாக் எல்லைப் பகுதியில் நடந்த மோதலில், கால்வான் பள்ளத்தாக்கில் 20க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்க்த்தில் கேள்வி எழுப்பியுள்ள சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், ”சீனாவின் தாக்குதலுக்கு எப்போது பதிலடி தரப்படும்? ஒரு தோட்டா கூட பயன்படுத்தாமல் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகி உள்ளனர். நாம் என்ன செய்தோம்? சீனத் தரப்பில் உயிழப்புகள் எத்தனை? சீனா இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்துவிட்டதா என்ன? நாடு உங்கள் பக்கம் உள்ள நிலையில் எப்போது உண்மையைப் பேசுவீர்கள் பிரதமரே? தேசம் உண்மைத் தெரிந்துகொள்ள துடிப்பாக உள்ளது. ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமே தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மௌனம் காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஒளிந்து கொண்டிருப்பது ஏன்? - மோடிக்கு ராகுல் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details