விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் மனித குலத்தின் உணவுப் பாதுகாப்புக்கு இடையே பெரிய அளவில் பிரிக்கமுடியாத ஒரு தொடர்பு இருக்கிறது. இந்த அடிப்படையான உண்மையுடன் கூடவே, இன்றைய உலகத்துக்கு ஏற்ற இந்த நாட்டின் விவசாயிகளுக்கான தேசிய அளவிலான திட்டத்தின் முக்கியதுவம் என்பது குறித்த டாக்டர் சுவாமிநாதனின் மதிப்புமிக்க அறிவுறுத்தல் அறிக்கையும் புறக்கணிக்கப்படுகிறது. தேசிய வேளாண் துறைக்காக, தலைவர்கள் வசதியாக ஒரு பின்னிருக்கையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
அண்மையில் மோடி அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாயிலான கூட்டு விவசாய கட்டமைப்பு நிதியத்தை தொடங்கி இருக்கிறது. அதன் படி தேசத்தின் நிகர வளர்ச்சி என்பது தொடர்ந்து ஒரு கானல் நீராக இருக்கும், விவசாயிகளின் நலன்களைப் பொறுத்தவரை வேளாண் வளர்ச்சி மற்றும் கிராம முன்னேற்றம் ஆகியவை ஒன்றிணைந்தவை அல்ல, தனித்தனியாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் குறிக்கோளின்படி வேளாண்துறையில் இந்தியாவை சுயசார்பு கொண்டதாக மாற்றுவதாகும். சங்கிலித்தொடர் விநியோக சேவைகள், அடிப்படை பதபடுத்துதல் மையங்கள், கருத்தரித்தல் கிடங்குகள், தரமான பரிசோதனை பிரிவுகள், குளிர் பதன சேமிப்பு வசதிகள், மதிப்பு கூட்டும் பிரிவுகள் மற்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை அறுவடை செய்வது முதல் சந்தைப்படுத்துதல் வரையிலான பல்வேறு இதர வசதிகளை கொடுப்பதாகும்.
விவசாயிகளின் உற்பத்தியாளர் சங்கங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மார்க்கட்டிங் கூட்டுறவு அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு அவற்றை உபயோகப்படுத்திக்கொள்ள விவசாயிக்கு வட்டி இல்லா கடன்களை கொடுத்து, அதன் வழியே முக்கியமான கட்டமைப்புகளை முன்னெடுப்பது மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது. போதுமான சந்தைவிலை கிடைக்கும் வரை அதற்கு ஏற்றவாறு வேளாண்பொருட்களை சேமிக்க வேண்டும். இது போன்ற மதிப்பு கூட்டப்படக் கூடிய பல்வேறு வசதிகளுக்கு விவசாயிகள் தங்கள் பொருட்களை கொண்டு வரக்கூடிய வகையில் ஏற்ற ஒரு முதலீடாக இருக்க வேண்டும் என்று அரசு நம்புகிறது.
மேலும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகள் வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் என்றும் தவிர இது உணவு வீணாவதை தடுக்கும் என்றும் மதிப்பிடுகிறது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மொத்த விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளின் மொத்த மதிப்பீடு அடிப்படையில் கட்டமைப்பு நிதியத்தில்இருந்து கடன் வழங்குதலின் பங்கை மத்திய அரசு இறுதி செய்யும். நாட்டின் வேளாண் துறையை மீட்டெடுப்பதை நோக்கி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலனுக்கு அது எந்த அளவுக்கு பங்களிக்கிறது என்பது இந்த மிகப்பெரிய திட்டத்தின் வெற்றியை அளவிடுவதற்கான ஒரு அளவுகோலாகும்.
பல்வேறு அம்சங்களுக்கு இடையே கட்டமைப்பு வசதிகள் குறைவு என்ற ஒரு அம்சம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு மலிவான விலை கிடைக்க செய்யும் வகையிலான ஒரு வில்லன் பாத்திரமாகவே செயல்படுகிறது. தக்காளிக்கு ஆதரவு விலை கூட கிடைக்காமல் சீற்றம் கொள்ளும் விவசாயி, தக்காளி மிகவும் அடிமட்ட விலைக்கு கேட்கப்படுவதால் அறுவடை செய்த செலவைக் கூட எடுக்க முடியாத நிலையில் அவற்றை ரோட்டில் கொட்டுகிறார்.