தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 26, 2020, 7:21 PM IST

ETV Bharat / bharat

கொள்கைக்காக போரிடும்போது எதிர்ப்பு கிளம்புவது இயல்பு - கபில் சிபல்

டெல்லி: வாழ்க்கையில் கொள்கைக்காக போரிடும்போது எதிர்ப்பு கிளம்புவது இயல்பு என காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

கபில் சிபல்
கபில் சிபல்

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர புதிய தலைவரை நியமிக்கக் கோரி செயற்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்தத் தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதினார்கள்.

இது குறித்து விவாதிக்கும் நோக்கில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக ராகுல் விமர்சித்தார்.

கடிதம் எழுதியவர்களுக்கு எதிராகவும் சோனியாவின் தலைமைக்கு ஆதரவாகவும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அம்பிகா சோனி ஆகியோர் செயற்குழு கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக ராகுல் கூறுகிறார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாதாடி வெற்றிபெற வைத்தேன்.

மணிப்பூரில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் அரசைக் காப்பாற்றினோம். கடந்த 30 ஆண்டுகளில் எந்தவொரு பிரச்னையிலும் பாஜகவுக்கு ஆதரவாக எந்தவொரு கருத்தையும் நாங்கள் வெளியிடவில்லை" என்று பதிவிட்டார்.

பாஜகவுடன் இணைந்து செயல்படுவதை நிரூபித்தால் கட்சியின் பதவிகளிலிருந்து விலக தயார் என குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

இந்நிலையில், கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறார்கள் என்று பொருள்படி தான் கூறவில்லை என்று கபில் சிபல், குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் ராகுல் காந்தி விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கொள்கைக்காக போரிடும்போது எதிர்ப்பு கிளம்புவது இயல்பு என கபில் சிபல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாழ்க்கை, சட்டம், அரசியல் ஆகியவற்றில் கொள்கைக்காக போரிடும்போது சமூக வலைதளத்தில் சமூக ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்புவது இயல்பு. ஆனால், ஆதரவு கிடைப்பதில்லை" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'ஜிஎஸ்டி வருவாய் மறுப்பு; மாநிலங்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம்'- சோனியா காந்தி

ABOUT THE AUTHOR

...view details