கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் வசிப்பவர் மீனாட்சி. கோரக்கர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர், பீடி சுற்றும் வருமானத்தைக் கொண்டு கன்னட மொழியில் முதுகலை பட்டப்படிப்பு வரை படித்துள்ளார். பழங்குடி சமூகத்தில் பிறந்து முதுகலை பட்டம் பெற்ற முதல் பெண் என்ற விருதை ஜனாதிபதியிடம் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி விருது இருக்கு, ஆன வேலை இல்லை - முதுகலை பட்டதாரி வேதனை - scheduled tribes
காசர்கோடு: கன்னட மொழியில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தும் உரிய வேலை கிடைக்காததால் பீடி சுற்றும் தொழிலை மேற்கொண்டு வருகிறார் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்.
ஆயிரத்து 500க்கும் குறைவான மக்களையே கொண்ட கோரக்கர் பழங்குடி சமூகத்திலிருந்து முதுகலைப்படிப்பு முடித்த இவர், தனக்கு கிடைக்கும் அரசு வேலை மூலம் பழங்குடி சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தற்போது ஒருபுறம் வேலை தேடி வருவதன் காரணமாக, இவரது பீடி சுற்றும் தொழிலும் வருமானம் குறைந்து வருகிறது. கடும் நெருக்கடியில் உள்ள இவருக்கு விருது கொடுத்த அரசு, இவரது படிப்பிற்கேற்ற வேலை தர வேண்டும் என்பதே பழங்குடி மக்களின் கோரிக்கையாக உள்ளது.