தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2+2 அமைச்சர்கள் சந்திப்பு: இந்தியா கிளம்பிய பாம்பியோ! - இந்தியா-அமெரிக்க இடையே 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

டெல்லி: 2+2 பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் இந்தியா புறப்பட்டனர்.

2+2 அமைச்சர்கள் சந்திப்பு: இந்தியா கிளம்பிய பாம்பியோ!
2+2 அமைச்சர்கள் சந்திப்பு: இந்தியா கிளம்பிய பாம்பியோ!

By

Published : Oct 26, 2020, 12:21 PM IST

Updated : Oct 26, 2020, 12:39 PM IST

இந்தியா-அமெரிக்க இடையே நாளை நடைபெறும் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் இன்று இந்தியா வருகின்றனர்.

டெல்லியில் நாளை நடைபெறும் மூன்றாவது இந்தியா-அமெரிக்க இருநாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 2+2 அமைச்சர்கள் உரையாடலில் அவர்கள் பங்கேற்கின்றனர்.

இதில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

2+2 அமைச்சர்கள்

இதுதொடர்பாக ட்விட் செய்துள்ள மைக்கேல் பாம்பியோ, “ இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கான எனது பயணத்தை தொடங்கிவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மூன்றாவது 2+2 உரையாடலை நடத்துவது ராஜதந்திர, பாதுகாப்பு நோக்கங்களுக்கான இந்தியா-அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நிருபிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Last Updated : Oct 26, 2020, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details