பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்கள் மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இவை மூன்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் வசிக்கும் மக்கள் அதிகமாக ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். காலை எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை புதிய அப்டேட்டுகளை பிறருக்கு தெரியப்படுத்துவதில்தான் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.
வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம் - பயனாளர்கள் அவதி
சமூகவலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய வலைதளங்களில் புகைப்படம், வீடியோக்கள் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரால் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் தங்களது புகைப்படம், மற்றும் வீடியோக்களை பதிவிறக்கும் செய்ய முடியவில்லை என உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது பயனாளர்கள் வீடியா, புகைப்படம் பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா கண்டங்களில் ஏற்பட்ட பிரச்னை தற்போது ஆசிய கண்டத்திற்குள்ளும் வந்திருப்பது பயனாளர்களை அச்சம் அடைய வைத்துள்ளது.
ஹேக்கர்களால் இதுபோன்ற பிரச்னை எழுந்துள்ளனவா என்றும் சந்தேகிக்க தோன்றுகிறது. வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் பயனாளர்கள் அனைவரும் ட்விட்டர் பக்கம் குவிந்துள்ளனர். மேலும், ட்விட்டர் பக்கத்தில் #facebookdown, #whatsappdown, #instagramdown உள்ளிட்ட ஹேஷ்டாக்குகளை உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதுகுறித்து பயனாளர்கள் வாட்ஸ் அப்பின் ட்விட்டர் பக்கத்திலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.