புதுச்சேரி கடல் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் தினமும் காலை நேரத்தில் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளை ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளித்துவருகிறது. இந்நிலையில் நீச்சல் வீரர் ஒருவர் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திமிங்கல சுறா ஒன்று ஆழப்பகுதியில் இருந்த வந்து அவருடன் விளையாடியது.
நீச்சல் வீரருடன் விளையாடிய திமிங்கல சுறா! - நீச்சல் விரர்
புதுச்சேரி: படகில் பயிற்சி சென்றவருடன் திமிங்கல சுறா ஒன்று சேர்ந்து விளையாடும் காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இதைப் பார்த்த சக வீரர்கள் அதை படம் பிடித்தனர். தற்போது இந்தக் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இது குறித்து நீச்சல் பயிற்சியாளர்கள் கூறுகையில், 'இந்த வகை திமிலங்கல சுறாக்கள் மனிதர்களிடம் மிகவும் நெருங்கிப் பழகும் தன்மை கொண்டவை. அவற்றின் அருகில் சென்றால் கூட யாருக்கும் எந்தவித தீங்கும் செய்யாது. இந்த சுறா படகின் அருகில் வந்து சென்றது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த மீன்களின் குணநலன்களைப் பற்றி அறிந்திருந்ததால் நாங்கள் அதன் அருகிலேயே சென்று வீடியோ, புகைப்படங்கள் எடுத்தோம். ஐந்து நிமிடங்கள் வரை எங்களுடன் சுற்றிவந்த திமிங்கல சுறா பின்னர் மீண்டும் ஆழ்கடலுக்குச் சென்றது' என்றனர்.