தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த 'தூய்மை இந்தியா'! - அசத்திய விங் கமாண்டர்

கொல்கத்தா: இந்திய விமானப் படையின் சார்பில் நடந்த பரப்புரை நிகழ்வில் விங் கமாண்டர் கஜானந்த் யாதவ் தரையிலிருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் தூய்மை இந்தியா கொடியை பாராசூட் போல் பற்றிக்கொண்டு பறந்தார்.

15000 அடி உயரத்தில் பறந்த விங் காமண்டர் கஜானந்த் யாதவ்

By

Published : Oct 4, 2019, 10:44 AM IST

மேற்கு வங்கம் மாநிலம் பனகரில் உள்ள அர்ஜன் சிங் விமானப்படை தளத்தில் காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய விமானப் படையின் சார்பில் தூய்மை இந்தியா (swatch bharat) பரப்புரை நடந்தது. இந்நிகழ்வை பிராந்திய விமானப்படை தலைவர் (air commodore) வேதஜ்னா தொடங்கிவைத்தார்.

பின்னர் இந்தப் பரப்புரை நிகழ்வுக்கான கொடியை அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட விங் கமாண்டர் கஜானந்த் யாதவ் விமானப் படைக்குச் சொந்தமான சி-130 என்ற விமானத்தில் தரையிலிருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தார். பின்னர்,தூய்மை இந்தியா கொடியை பாராசூட் போல் பற்றிக்கொண்டு பறந்தார்.

இந்நிகழ்வில் மற்றொரு விங் கமாண்டர் எச். பட் விமானத்தின் கேப்டனாகவும் வாரன்ட் அலுவலர் (warrent officer) ஆர்.டி. மிஸ்ரா வான்வழி கேமராமேனாகவும் செயல்பட்டனர்.

மேலும் காந்தி ஜெயந்தியன்று இந்திய விமான படை தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விமானப்படை தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. அனைவரும் தூய்மை இந்தியா பற்றிய 'காந்தியின் பார்வை'யைபின்பற்ற உறுதிமொழி ஏற்போம்" என்று பதிவிட்டிருந்தது.

இதையும் படியுங்க:

இந்திய விமானப்படை அனைத்து சவால்களையும் துணிந்து எதிர்க்கும் - விமானப்படைத் தளபதி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details