ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டதால் ரயில்களை இயக்குவதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்குத் திருப்பி அனுப்புவதற்காக மத்திய ரயில்வே மே ஒன்றாம் தேதி முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியது.
ஊரடங்கால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை இழந்த மேற்கு ரயில்வே! - ரயில் டிக்கெட் ரத்து
புதுச்சேரி: ஊரடங்கால் மேற்கு ரயில்வேக்கு ஆயிரத்து 784 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பின்னர், மே 12ஆம் தேதி முதல், நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்து பொதுப் பயணிகளுக்காகப் 15 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இருப்பினும், கரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைவான அளவிலேயே ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், ஊரடங்கால் மேற்கு ரயில்வே, ஆயிரத்து 784 கோடி ரூபாய் வருவாயை இழந்துள்ளதாக மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் சுமித் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவலளித்த அவர், “இந்த ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை டிக்கெட் ரத்து செய்யப்பட்டதால், 61.15 லட்சம் பயணிகளுக்கு 398.01 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வேயின் தலைமையகமாக விளங்கும் மும்பை பிரிவு மட்டும் இந்தக் காலகட்டத்தில் 190.20 கோடி ரூபாயை பயணிகளுக்கு திரும்ப அளித்துள்ளது" என்றார்.