தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் பணம் கிடைக்காததால் கடத்தப்பட்ட சிறுவன் படுகொலை! - மேற்கு வங்க சிறுவன் கடத்தல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு பின்னர் அக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

crime
crime

By

Published : Aug 10, 2020, 8:36 AM IST

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் தக்பங்களா பகுதியில் நேற்று (ஆக.9) வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த ரைஹான் மஹல்தர் என்னும் சிறுவன் காலை 11 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டான்.

அதையடுத்து கடத்திய அக்கும்பலிடம் இருந்து செல்போன் அழைப்பு ரைஹன் குடும்பத்தினருக்கு வந்தது. அந்த அழைப்பில், சிறுவன் உயிருடன் வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டப்பட்டது.

அவ்வளவு தொகை தங்களிடம் இல்லை எனக் குடும்பத்தினர் கூறி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தக் கொலைக்கார கும்பல் சிறிதும் மனிதாபிமானம் இல்லாமல் அதே பகுதியில் சிறுவனைப் படுகொலை செய்து சடலத்தை வீசி சென்றுள்ளனர்.

இந்நிலையில் சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது; அவரது சொத்துகள் அரசுடமையாக்க ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details