மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் வேலையின்மை, இளைஞர்களுக்கு வேலை பற்றாக்குறை குறித்து கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர். இரு அமைப்பினரும் பேரணியை ஹூங்லி மாவட்டத்தில் தொடங்கி ஹவுராவ் மாவட்டம் மேற்கு வங்க தலைமை செயலகத்தை நோக்கி சென்றனர்.
இடதுசாரி அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட்டம்! - காவல்துறை தடியடி
கொல்கத்தா: ஹவுராவில் வேலையின்மையை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதில் காவல் துறை தடியடி நடத்தினர்.
west bengal
போராட்டக்காரர்கள் தலைமை செயலகத்தை நெருங்கியபோது காவல் துறை அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.