நெகிழியால் செய்யப்பட்ட செங்கல்களா? அதுவும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழியால் ஆனதா? மேற்கு வங்கம் பிஸ்னுபூரில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் இதைத்தான் செய்கின்றன. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பங்குரா மாவட்டம் பிஸ்னுபூரின் துணை கோட்ட அலுவலர்தான் இந்த முயற்சிக்கு வடிவம் கொடுத்துள்ளார். பயன்படுத்தப்பட்ட மறுசுழற்சிக்குள்ளாக்க முடியாத நெகிழிகளைப் பயன்படுத்தி செங்கல்களைச் செய்யலாம் என்ற யோசனையை மானஸ் மண்டல் என்ற அலுவலர்தான் கொடுத்துள்ளார்.
இது குறித்து பிஸ்னுபூரின் துணை கோட்ட அலுவலர் மானஸ் மண்டல் கூறுகையில், "நெகிழி பாட்டில்கள் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின் திடமான உருவம் கிடைக்கிறது. அதிலிருந்து செங்கல்கள் செய்யப்படுகிறது. வீட்டிலிருந்த பழைய நெகிழி பாட்டில்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. நெகிழியிலிருந்து பைகள் தயாரிக்கப்படுகின்றன" என்றார். இந்தப் பணியில் மண்டல் தன் மகனை ஈடுபடுத்துகிறார். மண்டல் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.