மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் தடுப்பு ஊரடங்கை வெற்றிகரமாகக் கடைப்பிடிக்க மத்திய பாதுகாப்புப் படைகளை உதவிக்கு அழைக்க வேண்டும் என ஆளுநர் ஜகதீப் தங்கர் கூறியதை அடுத்து தொடங்கிய முரணை முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநர் இடையேயான தொலைபேசி உரையாடல் தற்காலிகமாக முடிவிற்கு கொண்டுவந்துள்ளது.
இதனையடுத்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நேற்று தொலைபேசி மூலமாக அழைத்த முதலமைச்சர் மம்தாவை பாராட்டுகிறேன். ஊரடங்கு அமல்படுத்தல் தொடர்பில் இருவரும் குறிப்புகள் மூலமாக பேசினோம். இருபக்கமும் புதுப்பிப்புகள் இருந்தன. ஊரடங்கு, சமூக இடைவெளியை 100 விழுக்காடு கடைப்பிடிக்கப்படுவதாக அறிய முடிகிறது.