தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் மரணம்; ராகுல் காந்தி அஞ்சலி - சோமன் மித்ரா மறைவு

கொல்கத்தா: மேற்குவங்க காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த சோமன் மித்ரா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 78.

Soman
Soman

By

Published : Jul 30, 2020, 9:19 AM IST

மேற்குவங்க காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த சோமன் மித்ரா இன்று (ஜூலை 30) அதிகாலை காலமானார். 78 வயதான சோமன் மித்ரா சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இதனிடையே, சோமன் மித்ரா மாரடைப்பால் உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை எனவும் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

1972-2006ஆம் ஆண்டு வரை தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். 2009-14 காலகட்டத்தில் மக்களவை உறுப்பினராகவும் பதவிவகித்த சோமன் மித்ரா, 2018ஆம் ஆண்டு மேற்குவங்க காங்கிரஸின் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், சோமன் மித்ராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு தனது இரங்கல், மித்ராவின் மறைவு பேரிழப்பு எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அந்நிய முதலீட்டை ஈர்க்க முயற்சி - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

ABOUT THE AUTHOR

...view details