தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரு லட்சம் கோடி வேண்டும் - மத்திய அரசுக்கு மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா : ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் நிவாரண, மறுசீரமைப்பு, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒரு லட்சம் கோடி வழங்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

banerjee
banerjee

By

Published : May 24, 2020, 9:39 AM IST

ஆம்பன் புயலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலம் சவுத் 24 பார்க்னாஸ் மாவட்டத்தை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "நாம் கரோனா வைரஸ் பேரிடரை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்த புயல் தாக்கியுள்ளது. இதனால் 29 தொகுதிகளில் உள்ள 76 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறு சிறு அணைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்பன் புயலால் நான்கு லட்சம் விவசாயிகளும், 3.2 லட்சம் மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் நிவாரண, மறுசீரமைப்பு, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒரு லட்சம் கோடி வழங்க வேண்டும். 1000 கோடி ரூபாய் நிதியுதவி போதாது.

மாநிலத்தின் இருப்புத் தொகை கடந்த மூன்று மாதங்களாகக் குறைந்துகொண்டே வருகிறது. அதுகுறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம். நிலைமையை இயல்புக்குக் கொண்டுவர இரவு பகலாக உழைத்து வருகிறோம்"என்றார்.
இதையும் படிங்க : தடுப்பூசி திட்டங்களில் காலதாமதம்... ஆபத்தில் 80 மில்லியன் குழந்தைகள் - எச்சரிக்கும் WHO

ABOUT THE AUTHOR

...view details