மேற்கு வங்கத்தில் வன்முறை! - west-bengal
2019-04-23 15:48:10
west bengal bomb blaast
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அந்தவகையில், மேற்கு வங்க மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது
அப்போது, முர்ஷிதாபாத் அருகில் ராணி நகரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், அங்கு அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் சிலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் சமயத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.