கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் களநிலவரத்தை ஆராயவும், மக்களின் பிரச்னைகளை தீர்க்க பரிந்துரைகளை வழங்கவும் மத்திய அரசு அபூர்வா சந்திரா தலைமையில் குழு ஒன்றை அமைத்து இருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களில் இந்தக் குழு ஆய்வு செய்ய உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் குழுவானது ஊரடங்கு நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக மேற்கு வங்கம் சென்றது. மேற்கு வங்க சுற்றுப்பயணத்திற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கம் எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என இந்தக் குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இக்குழுக்கள் ஆய்வுக்காகவும், அனுமதிக்காகவும் காத்திருந்தன. ஆனால், மாநில அரசின் தரப்பில் இருந்து எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை என உள்துறை அமைச்சக அலுவலர் புன்யாசலிலா ஸ்ரீவாஸ்தவா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து, நேற்று (ஏப்ரல் 21) மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசிடம் இது தொடர்பாக விளக்கம் கோரியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கு எழுதிய மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர் ராஜீவா சின்ஹா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ‘ஊரடங்கு நிலவரத்தை ஆராய வந்திருக்கும் மத்திய குழுவின் ஆய்வு அணிகளுக்கு (ஐ.எம்.சி.டி) மாநில அரசு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்பது ஒரு உண்மை அல்ல.