கும்பலாகச் சேர்ந்து நிகழ்த்தப்படும் வன்முறைகள் கடைசி ஆறு மாதங்களில் அதிகரித்துள்ளதா என எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், "சட்டம் மற்றும் ஒழுங்கு மாநில பட்டியலுக்கு கீழ் வருகிறது.
இந்தியாவில் கும்பல் வன்முறை அதிகரித்துள்ளதா? அமைச்சரின் பொறுப்பற்ற பதில்! - கும்பல் வன்முறை
டெல்லி: கும்பல் வன்முறைகள் பற்றியான தனியான தகவல்கள் ஏதும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் இல்லை என மத்திய இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
குற்றங்களை தடுப்பது, கண்டுபிடிப்பது, ஆராய்வது, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவது ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பு. கும்பல் வன்முறைகள் பற்றியான தனியான தகவல்கள் ஏதும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் இல்லை" என்றார்.
சிறுபான்மையினர்கள், தலித்துகள் ஆகியோருக்கு எதிராக கும்பல் வன்முறை இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. முக்கியமாக, மாட்டிறைச்சி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கும்பல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட முக்கிய பிரச்னையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பொறுப்பற்ற பதிலை அளித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.