தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா திரும்பிச் செல்லும் காலம் நெருங்கிவிட்டது - விஞ்ஞானி மைக்கேல் லெவிட்!

டெல்லி: உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தொற்று விரைவில் குறையும் என்று நோபல் பரிசுப்பெற்ற உயிர்இயற்பியலாளரும், விஞ்ஞானியுமான மைக்கேல் லெவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

michael levitt
michael levitt

By

Published : Mar 26, 2020, 2:38 PM IST

உலகளவில் 190 நாடுகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. நமக்கும் கரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு நாட்டின் மக்களும் பீதியில் உறைந்து போய் உள்ளனர். கரோனா வைரஸ் தொற்றால், இதுவரை சுமார் 3.86 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு வேதியியல் துறையில் நோபல் பரிசுப்பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லெவிட், "கரோனா வைரஸ் தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்றும், அதன் வீரியம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது" என்றும் தெரிவித்துள்ளார். சீனா நாட்டில் கரோனா வைரஸ் தொடங்கியபோது, இந்த வைரஸ் லட்சக்கணக்கானோரை பாதிக்கும் என பல வல்லுநர்கள் கணித்தபோது, மைக்கேல் லெவிட் மிகத்துல்லியமாக தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்.

அதில், சீனாவில் 80 ஆயிரம் பேர் மட்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள் என்றும், சுமார் 3,250 பேர் வரை மட்டுமே உயிரிழக்கக்கூடும் என்றும் கணித்திருந்தார். அவரின் இந்தக் கணிப்பை மெய்ப்பிக்கும் வகையில், சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 171 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,277 ஆகவும் உள்ளது.

இந்தநிலையில், தற்போது மீண்டும் ஒரு கணிப்பை அறிவித்துள்ளார். அதில் கரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளார். தற்போது, மக்களுக்கு தேவைப்படுவது நம்பிக்கை ஒன்று மட்டுமே எனவும், தனிமைப்படுத்துதல், சமூக விலக்கல்களை மக்கள் கடைப்பிடித்தால் விரைவில் இந்த கரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரும் என்றும் விஞ்ஞானி மைக்கேல் லெவிட் கணிப்பைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முடங்கியது தேசம்: ஜிடிபி 2.5 சதவிகிதம் குறைய வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details