சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட் 19 (கொரோனா வைரஸ்) அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. அதேபோல் இந்தியாவிலும் கேரள மாநிலத்தில் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது, பின்னர் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர்கள் குணமடைந்தனர்.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது மீண்டும் கோவிட் 19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 28 பேருக்கு தற்போது கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கோவிட் 19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தற்போது பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துவருகிறது.
கோவிட் 19 வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழலில் தற்போது மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "மாஸ்க் அணிவது மட்டும் இதற்கான தீர்வு அல்ல, சொல்லப்போனால் அனைவருக்கும் மாஸ்க் தேவையில்லை.