தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிஏஏ தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் - டிஆர் பாலு - சிஏஏ குறித்து டி ஆர் பாலு

டெல்லி: சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பும் என்று திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

TR Balu
TR Balu

By

Published : Jan 30, 2020, 11:53 PM IST

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து நடைபெறும் விவாதத்தில் சிஏஏ-தொடர்பாக திமுக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும். பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இதுகுறித்து தெரிவித்துள்ளோம்.

தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதியளித்தால் அப்பகுதியிலுள்ள விவசாயம் பாதிக்கப்படும்

டி ஆர் பாலு செய்தியாளர் சந்திப்பு

5, 8ஆம் வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத்தேர்வு உட்பட தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான அனைத்து திட்டங்களும் மத்திய அரசின் ஆதரவுடனேயே நடைபெறுகிறது. இவை அனைத்தும் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரானதும் முடிவுக்கு வந்துவிடும்" என்றார்.

இதையும் படிங்க: கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ்!

ABOUT THE AUTHOR

...view details