தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"நாங்கள் ஒன்றும் துறவிகள் அல்ல" - எடியூரப்பா - jd(s) - congress

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு இயந்திரங்கள் முழுமையாக செயலிழந்துவிட்டதாக, கர்நாடக மாநில எதிர்கட்சித் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

எடியூரப்பா

By

Published : Jul 2, 2019, 10:23 AM IST

பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா, "கர்நாடகாவில் அரசு இயந்திரங்கள் முழுமையாக செயலிழந்துவிட்டதாகவும், ஜே.டி (எஸ்) - காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்துவிட்டல் பாஜக ஆட்சியமைக்க தயக்கம் காட்டாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக கர்நாடக மாநிலத் தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவும்போது, ​​முதலமைச்சரோ அமெரிக்காவுக்கு உல்லாச பயணம் சென்றுள்ளதாக விமர்சித்தார்.

"மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தான் எதிரானவன் அல்ல, ஆனால் பயணம் மேற்கொள்ள இது சரியான நேரம் அல்ல" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details