புதுச்சேரி சட்டசபை வளாகப் கமிட்டி அறையில் புதுச்சேரியில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு ஆன்லைன் மூலம் தங்களது விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான இணையதள வசதியை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
'ஒரு காலமும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்..!' - நாராயணசாமி - chief minister
புதுச்சேரி: "ஒரு காலமும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்" என்று, முதலமைச்சர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.
ஒரு காலமும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - நாராயணசாமி
பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதுச்சேரியில் 700 தொழிற்சாலைகள் தொடங்க தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. சென்னை ஆவடியிலிருந்து 500 தொழிற்சாலைகள் புதுச்சேரியில் தொழிற்சாலை தொடங்க உள்ளனர். இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்க வாயப்புள்ளது. புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம்" என்றார்.