தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், அதை விசாரித்த நீதிபதிகள் திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அனுமதி அளித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பை மத்திய வீட்டுவசதி மற்றம் நகர்ப்புறத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகளவில் சிறந்த தலைநகரமாக டெல்லிஉருவெடுக்கும். 2022ஆம் ஆண்டில் நாடு 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்படும். இது புதிய இந்தியாவின் கனவுகளை வெளிப்படுத்துவதாக இருக்கும்" என்றார்.