எந்த வேறுபாடும் இல்லாமல் சமத்துவம் மற்றும் சமூக நீதி குறித்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கும் ஒரு சட்ட கேடயம். 1946ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அத்தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கும் கூட்டத்தில் பண்டித நேரு உதிர்த்த வார்த்தைகள் இவை.
சட்டங்கள்
அந்நிய ஆட்சியாளர்களால் மக்கள் அடிமைத் தனத்தில் இருந்தனர். இதனை உடைக்கும் பொருட்டு பல அறிஞர்களும், அறிவு ஜீவிகளும் ஒன்றுக் கூடினர். அவர்கள் சமத்துவத்தையும், சுதந்திரத்தையும், சகோதரத்துவத்தையும் பிரதான தூண்களாக்கி அரசியலமைப்பை தயாரித்தனர்.
இந்த அரசியலமைப்பு சிறந்த ஆளுமைகளின் புத்திசாலித்தனத்தால் உருவாக்கப்பட்டது. ஆகவேதான் 70 ஆண்டுகள் நிறைவுற்ற போதிலும் உயிர்ப்புடன் உள்ளது. பிரெஞ்சு அரசியலமைப்பிலிருந்து சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம், சோவியத் ஒன்றியத்திலிருந்து ஐந்தாண்டு திட்டம், அயர்லாந்தில் இருந்து கொள்கைகள் மற்றும் ஜப்பானில் இருந்து அரசியலமைப்பின் செயல்பாடு ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டன.
தலைவர்கள் கருத்து
அரசியலமைப்பின் பொன்விழா தினத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன், அரசியலமைப்பின் நோக்கங்கள், குடிமக்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை அடைந்த பயன்கள் குறித்து பேசினார்.
மற்றொரு குடியரசுத் தலைவராக சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், அரசியலமைப்பு குறித்து நாட்டுக்கு வழிகாட்டினார். இந்திய அரசியலமைப்பில் இதுவரை 100க்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆயினும் பசி, உடல்நலக் குறைவு உள்ளிட்டவற்றை நிவர்த்தி செய்ய முடியவில்லை.