புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாரை ஆதரித்து ரெயின்போ நகர்ப் பகுதியில், முதலமைச்சர் நாராயணசாமி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “புதுச்சேரி வந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்ளவில்லை.
சீமான் புதுச்சேரிக்குள் நுழைந்தால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்! - நாராயணசாமி - puducherry cm election campaign
புதுச்சேரி: தரம் தாழ்ந்த அரசியல்வாதியாக செயல்படும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரி வரும்போது அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு, அதிமுக கூட்டணி ஆதரவு அளிக்கவில்லையா எனக் கேள்வி எழுகின்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியபடி ஓபிஎஸ் செயல்பட்டுள்ளார் எனத் தெரிகின்றது. மக்கள் நலத்திட்டங்களைத் தடுத்தால் துணைநிலை ஆளுநரை விமர்சிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை" எனக் குறிப்பிட்டுள்ளார் நாராயணசாமி.
தொடர்ந்து பேசிய அவர், தரம் தாழ்ந்த அரசியல்வாதியாகச் செயல்படும், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் நாகரிகமின்றி பேசிவருவதாகத் தெரிவித்துள்ளார். அவர் புதுச்சேரிக்கு வரும்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் எனக் கூறியுள்ளார்.