சமூக வலைதளங்கள் பிரியங்கா காந்தியை தேசத்தின் முக்கியத் தலைவராகக் காட்ட முயற்சிக்கின்றன எனவும்; ஆனால் நாங்கள் அவரை ஏற்கெனவே பிரியங்கா ட்விட்டர் வதேரா என்றுதான் அழைத்து வருகிறோம் எனவும் உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.
'கடந்த மக்களவைத் தேர்தலின்போது தனது சகோதரரைப் பிரதமராக்கி விடலாம் என நினைத்து பிரியங்கா வதேரா உத்தரப் பிரதேசத்துக்கு வந்தார். ஆனால், ராகுலால் அவரது தொகுதியிலேயே வெற்றிபெறமுடியவில்லை' என விமர்சித்துப் பேசியுள்ளார், கேசவ் பிரசாத் மவுரியா.
மேலும், 'பிரியங்காவை நாங்கள் ஒரு பெரிய பொருட்டாகப் பார்க்கவில்லை. அவர் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ட்வீட் செய்வார். அப்போது, ஊடகங்கள் அவரை தேசத்தின் முக்கியத்தலைவர் போல காட்டும். பாஜக ஆளாத மாநிலங்களின் நிலையை பிரியங்கா பார்ப்பதில்லை. அவர், மோடி, ஆதித்யநாத் ஆகியோர் செயல்பாடுகளை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார். அதனால், மோடி, ஆதித்யநாத் செய்யும் நன்மைகள் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.
தவறான கண்ணோட்டத்திலேயே பார்ப்பாரானால், அவர் நல்ல கண் மருத்துவரை சந்தித்து கண்ணை சோதிப்பது நல்லது' என்று கிண்டலாகப் பேசியுள்ளார், கேசவ் பிரசாத் மவுரியா.