தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங். தலைவர்களைச் சந்திக்கும் எண்ணமில்லை: எம்.எல்.ஏ.க்கள் கடிதம்! - letter to police

மும்பை: காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்கும் எண்ணமில்லை என்றும் தங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் மும்பையில் விடுதி ஒன்றில் தங்கியுள்ள கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் காவல் துறைக்குக்  கடிதம் எழுதியுள்ளனர்.

காவல்துறைக்கு எம்.எல்.ஏக்கள் கடிதம்

By

Published : Jul 15, 2019, 6:58 PM IST

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.

இதற்கிடையே, மும்பையில் தனியார் விடுதியில் தங்கியுள்ள 14 எம்.எல்.ஏ.க்கள் காவல் துறைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், 'எங்களுக்கு மல்லிகார்ஜுன கார்கேயையோ, குலாம் நபி ஆசாத்தையோ அல்லது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றவர்களையோ சந்திக்கும் எண்ணம் இல்லை. அவர்கள் மீது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 18ஆம் தேதி, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், மும்பை காவல் துறையினருக்கு 14 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details