ஜம்மு- காஷ்மீரில் உள்ள முக்கிய ஆறு கட்சிகள் இணைந்து அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததற்கு எதிராக இணைந்து போராட முடிவெடுத்துள்ள நிலையில், அதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இவரின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, நாங்கள் யாருக்கும் கை பொம்மைகள் அல்ல எனக் கூறியுள்ளார்.
"ஜம்மு காஷ்மீரின் பிரதான கட்சிகளை பாகிஸ்தான் தாக்கி பேசிவந்தது. ஆனால், தற்போது எங்களை பாகிஸ்தான் விரும்புகிறது. இதையொட்டி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி ஆட்சியாளர்களுக்கோ, எல்லை கடந்துவரும் நபர்களுக்கோ நாங்கள் கை பொம்மை அல்ல" என ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
எல்லை கடந்து ஆயுததாரிகள் வருவது குறித்து பதிலளித்த அவர், பாகிஸ்தான் ஆயுதம் தாங்கியவர்களை காஷ்மீருக்குள் அனுப்புவதை நிறுத்தவேண்டும். காஷ்மீரில் ரத்தம் சிந்துவதை நிறுத்த நாங்கள் விரும்புகிறோம். ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கடந்தாண்டு அரசியலமைப்புக்கு விரோதமாக சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு எதிராக போராட முடிவெடுத்துள்ளன என்றார்.
இதையும் படிங்க:ஜம்மு-காஷ்மீரின் உரிமைக்கான போராட்டம் தொடரும் - தேசிய மாநாட்டு கட்சி சூளுரை!