தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீண்டும் எழுப்பப்படும் போடோலாந்து கோரிக்கை - மீண்டும் எழுப்பப்படும் போடோலாந்து கோரிக்கை

திஸ்பூர்: தடைசெய்யப்பட்ட இயக்கமான போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் ஆயுத புரட்சியை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

Bodoland
Bodoland

By

Published : Jan 21, 2020, 3:36 PM IST

மியான்மரில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியின் 30 உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தனர். இந்த இயக்கத்தின் தலைவர் சரோய்க்வாரா, பொதுச் செயலாளர், தலைமை தளபதி, நிதிச் செயலர் ஆகியோர் புரட்சியை கைவிட்டுவிட்டு மத்திய, மாநில அரசுகளிடம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட அஸ்ஸாம் மாநிலத்துக்குச் சென்றுள்ளனர்.

இது குறித்து இயக்கத் தலைவர் சரோய்க்வாரா கூறுகையில், "அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவே இங்கு வந்துள்ளோம். போடேலாந்து விவகாரத்தை தீர்க்கும்விதமாக மத்திய, மாநில அரசுகளிடம் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.

அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் பிராந்தியத்தில் அமைதி நிலவிடும் என நம்புகிறேன். அனைவரும் அமைதியையே விரும்புகின்றனர். எங்களின் ஒரே கோரிக்கை போடோலாந்துதான்" என்றார்.

மீண்டும் எழுப்பப்படும் போடோலாந்து கோரிக்கை

அஸ்ஸாம் சென்ற இயக்க உறுப்பினர்களுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிங்க: 'ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்' - நாராயணசாமி

ABOUT THE AUTHOR

...view details