நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை. எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன, எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள், பிரதமர் வேட்பாளர் யார்? என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, உத்தரப் பிரதேசத்தை பொருத்த வரையில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைப்பதாகவும், இந்த கூட்டணியில்தான் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்தார். அகிலேஷ் யாதவின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகவே கிசுகிசுக்கப்பட்டன.