தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உணவுப் பொருட்களை பதுக்கிய அலுவலர்கள் - பசிக்கொடுமையில் வாடும் கிராம மக்கள் போராட்டம்

கொல்கத்தாவில் ஊரடங்கை சாதகமாகப் பயன்படுத்தி, பொது விநியோக அமைப்பினர் உணவுப் பொருட்களைப் பதுக்கியதால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தாவில் பசிக்கொடுமையில் வாடும் கிராம மக்கள் போராட்டம்
கொல்கத்தாவில் பசிக்கொடுமையில் வாடும் கிராம மக்கள் போராட்டம்

By

Published : Apr 23, 2020, 12:51 AM IST

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் மதுராபூரியிலுள்ள கிராமத்தில், உள்ளூர் பொது விநியோக அமைப்பின் கடைகளில் ரேஷன் மற்றும் உணவுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பதுக்கல் குறித்து உள்ளூர் பஞ்சாயத்து அலுவலர்கள் குரல் எழுப்பாததையும் கண்டித்து கிராமவாசிகள் போராட்டம் நடத்தினர்.

பொது விநியோக அமைப்பின் கடைகளில் உணவு தானியங்கள் இல்லாதது குறித்து பலமுறை உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகளிடம் புகார்கள் தெரிவித்தும்; எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இது குறித்து அப்பகுதியினர் வேதனைத் தெரிவித்தனர்.

'ஊரடங்கை சாதகமாக்கிக் கொண்டு கடை உரிமையாளர் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு தானியங்களை பதுக்கி வைத்திருக்கிறார். நாங்கள் தொடர்ந்து இதுகுறித்து புகார் தெரிவித்து வருகிறோம். எங்களிடம் இப்போது உணவுப் பொருட்கள் எதுவுமே இல்லை. மூலிகைகள் மற்றும் செடி, கொடிகளை உண்டு பிழைத்திருக்கிறோம். எங்கள் வீடுகளில் உணவு என்ற ஒன்று இல்லை' எனப் பசியில் வாடும் கிராமவாசிகள் வேதனைத் தெரிவித்தனர்.

கிராமவாசிகளின் இந்தப் போராட்டத்தை அடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், அவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால், மக்கள் ஆத்திரத்தில் எரியும் டயர்களை எறிந்து தங்கள் கோபத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது.

இதையும் படிங்க:சாதுக்கள் கொலை: டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது மனித உரிமைகள் ஆணையம்!

ABOUT THE AUTHOR

...view details