தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'எந்த வசதியும் இல்லை... இருந்தாலும் வாக்களிப்போம்' -கிராம மக்கள் உறுதி - மக்களவைத் தேர்தல்

கொல்கத்தா: தங்கள் கிராமத்தில் எந்த வசதியும் இல்லை, இருந்தும் ஜனநாயக கடமையை ஆற்ற வாக்களிப்போம் என மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

WB: No school, water or healthcare facilities, but villagers say will vote just for democracy

By

Published : Apr 10, 2019, 10:26 AM IST

மேற்கு வங்க மாநிலம் ஜெயந்தி நதிக்கு அருகில் உள்ள பூட்டியா பஸ்தி கிராமம். இந்த கிராமத்தில் சுகாதார நிலையம், சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவித்துவருகின்றனர்.

17ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், எந்தவித வசதிகளும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இந்தத் தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம் என அந்த கிராம மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் சேத்ரி பேசுகையில், ‘எங்கள் கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. இருப்பினும் ஜனநாயக கடமையை ஆற்றக் கட்டாயம் வாக்களிப்போம்’ என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details