தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக முக்கிய பிரமுகர் சுட்டுக் கொலை! - பாஜகத் தலைவர் சுட்டு கொலை

கொல்கத்தா: அடையாளம் தெரியாத இரு நபர்களால் பாஜக முக்கிய பிரமுகர் தேப்நாத் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Debnath

By

Published : Oct 13, 2019, 11:49 AM IST

மேற்குவங்க மாநிலம் நதியா மாவட்டத்தில் மளிகை கடை நடத்திவருபவர் ஹராலா தேப்நாத். பாஜகவைச் சேர்ந்தவரான இவர், அக்டோபர் 11ஆம் தேதி இரவு 10 மணியளவில் தனது மளிகை கடையை மூடச் சென்றார்.

அப்போது, சில பொருட்களை வாங்குவதுபோல் கடைக்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் தேப்நாத்தை துப்பாக்கியால் சுட்டனர். இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தேப்நாத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தேப்நாத் உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாநில பாஜக தலைவர் மனோபேந்திரா கூறுகையில், “மனைவியின் கண் முன்னே தேப்நாத் சுட்டுகொல்லப்பட்டார். இதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு வலுவாக இருக்கிறது” என்றார்.

மேலும், இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் கூறுகையில், “பயமே இன்றி மக்களைக் கொலை செய்கின்றனர். ஆனால், இதனைத் தடுக்க அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றனர். கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி பாஜகவினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details