தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை - கொலையாளிகள் யார்? - Murder of three members of the same family

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று பேர் கொலை

By

Published : Oct 10, 2019, 11:37 AM IST

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் ஜியாகாஞ் பகுதியைச் சேர்ந்தவர் பந்து பிரகாஷ் பால்(35). இவர் அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி பியூட்டி, மகன் அங்கன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இவர்கள் மூன்று பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தனர். இந்த மூவரின் உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முர்ஷிதாபாத் மாவட்ட காவல் துறை அலுவலர் கூறுகையில், ”பள்ளி ஆசிரியர் பந்து பிரகாஷ் பால், தனது குடும்பத்துடன் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவர்கள் மூவரின் உடலும் ரத்த வெள்ளத்தில் அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன. இவர்கள் திங்கட்கிழமை இரவு கொலை செய்யப்பட்டனர்” என்று தெரிவித்தார்.

மேலும், விஜயதசமி கொண்டாட்டத்திற்கு மூவரும் வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த அப்பகுதியினர் வீட்டின் கதவைத் தட்டிப் பார்த்தபோது, யாரும் திறக்காததால் எங்களுக்கு(காவல் துறையினர்) தகவல் தெரிவித்தனர் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:சிறுத்தையிடம் துணிச்சலுடன் செயல்பட்ட சிறுமிக்கு அரசு விருது!

ABOUT THE AUTHOR

...view details