மேற்குவங்க மாநிலம் நடியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆன்மீக பாடகர் நிரஞ்சன். இவர் பாடல்களுக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம்.
அந்தவகையில், தனது சுற்றுபயணத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம், மேற்குவங்க மாநிலம் மால்டாவிற்கு சென்றுள்ளார். அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் போக்குவரத்து சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்து. இதனால், அதே மாவட்டத்தில் உள்ள தோபாரா என்னும் கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரரின் வீட்டிற்கு சென்ற நிரஞ்சனிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
கரோனா தொற்று பரவல் அச்சத்தில் இருந்த அந்தக் கிராம மக்கள் வெளியூரிலிருந்து வந்திருந்த நிரஞ்சனை கிரமத்திற்குள்ளே வர அனுமதிவில்லை. தனக்கு எந்தவொரு நோய் தொற்றும் இல்லை என்று நிரூபிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட நிரஞ்சனுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அவருக்கு எவ்வித நோய்த் தொற்றும் இல்லை என்று கூறிய மருத்துவர், வெளியூரிலிருந்து வந்துள்ளதால் 14 நாட்கள் தனிமைப்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.