இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொல்கத்தா அருகே உள்ள கோலகாட்டில் அகாடமி அமைக்க சனாதன் பிராமண பிரிவுக்கு நிலம் வழங்கியிருந்தோம். இந்த பிரிவில் உள்ள பல அர்ச்சகர்கள் நிதி ரீதியாக பலவீனமாக உள்ளனர்.
எல்லா மொழிகளையும் மதிக்கிறோம்- மம்தா பானர்ஜி - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
கொல்கத்தா: எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை சனாதன பிராமண அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இலவச வீட்டு வசதி வழங்கப்படும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
அவர்களுக்கு மாதத்திற்கு ரூ .1,000 கொடுப்பதன் மூலமும், மாநில அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுவசதி வழங்குவதன் மூலமும் அவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். " எனத் தெரிவித்துள்ளார்.
இந்தி திவாஸுக்கு மக்களை வாழ்த்திய அவர், தனது அரசாங்கம் எல்லா மொழிகளையும் மதிக்கிறது என்றும் மொழியியல் சார்பு இல்லை என்றும் கூறினார். எல்லா மொழிகளையும் மதிக்கிறோம். புதிய இந்தி அகாடமியை உருவாக்க முடிவு செய்துள்ளோம். தலித் சாகித்ய அகாடமி அமைக்கவும் முடிவு செய்துள்ளோம். தலித்துகளின் மொழிகள் வங்காள மொழியில் செல்வாக்கு செலுத்துகின்றன, ”என்றும் அவர் கூறியுள்ளார்.