மக்களவைத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு, மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் பன்குரா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் பாஜகவிற்கும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாஜக கட்சியைச் சேர்ந்த ஒருவரை செங்கலை கொண்டு சரமாரியாக திரிணாமூல் கட்சியினர் தாக்கினர்.
மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோதல்! - trinamool congress members
பன்குரா: மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குச்சாவடி மையத்தில் பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வாக்குபதிவில் ஏற்பட்ட மோதலில் பாஜக ஒருவர் படுகாயம்
தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரை, பாஜக கட்சியினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இரண்டு கட்சியினரிடையே நடந்த மோதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த நபர் தாக்கப்பட்ட வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி, அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.