மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார்.
வயநாடு மக்கள் ராகுலைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் : ஹரியானா முதலமைச்சர் - வயநாடு
சண்டிகர்: மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அப்பகுதி மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என ஹரியானா முசலமைச்சர் மனோகர் லால் கட்டார் விமர்சித்துள்ளார்.
Monhar
இந்நிலையில், ஹரியானாவின் கர்னல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், உத்தரப்பிரதேச மாநிலத்திலேயே தன்னுடைய பலத்தை நிரூபிக்கமுடியாத ராகுல் காந்தியை, மீண்டும் அமேதிக்கே செல்லுமாறு வயநாடு மக்கள் கண்டிப்பாக தூக்கி எறிந்து விடுவார்கள் என்றார்.