தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாடு அளவுக்கு தண்ணீர் பஞ்சம் இல்லை - புதுச்சேரி அமைச்சர் - Water scarcity

புதுச்சேரி: தமிழ்நாட்டைப் போன்று புதுச்சேரியில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்று அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

minister namasivayam

By

Published : Jun 25, 2019, 4:09 PM IST

புதுச்சேரியில் நிலத்தடி நீரைப் பாதுகாப்பது குறித்தும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்தும் முக்கிய ஆலோசனை கூட்டம் புதுச்சேரி தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், தலைமை செயலர் அஸ்வின்குமார், மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், 'புதுச்சேரியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும் மழைநீர் சேகரிப்பு அதை கண்காணிக்க உயர்மட்ட குழு ஒன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விரைவில் அமைக்கப்படும்.

புதுவையில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட 52 நீர்நிலைகள் தூர் வாரப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ளது போல் புதுச்சேரியில் தண்ணீர் பஞ்சம் இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் பிரச்னை உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது' என்று அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details