தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தண்ணீர், சுகாதாரம்: கோவிட்-19க்கு எதிராக உலக தலைவர்கள் அணி திரள வேண்டும்! - hygiene

கோவிட்-19 முதன்மையானது அல்ல; நாடுகள் எதிர்கொள்ளும் கடைசி தொற்றுநோயாக இருக்க வாய்ப்பில்லை. எதிர்கால நெருக்கடிக்கு பின்னடைவு என்பது நாம் இப்போது எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்பதிலும், அதே போல் இம்மாதிரியான சூழலில் வகுக்கப்படும் கொள்கைகள், நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் சாதாரண காலங்களில் சேமித்துள்ள திறன் ஆகியவற்றைப் பொறுத்தது.

WHO
WHO

By

Published : May 26, 2020, 12:19 PM IST

ஹைதராபாத்: உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில், கை கழுவுதல், சுகாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியன கோவிட்-19 நோய்க்கு எதிராக போராட உதவும் முதல் சாத்தியங்கள் என்று தெரிவித்துள்ளது.

உலக சுகாதார மையத்தின் (WHO) சமீபத்திய அறிக்கையில், “நீர், சுகாதாரம், கை சுத்தம் ஆகியவையும், தகுந்த இடைவெளியை கடைபிடிப்பதும் கோவிட்-19 போன்ற எந்த நோய்க் கிருமி பரவுவதையும் கட்டுப்படுத்தும் மையமாக திகழ்கிறது. இது உயிர்களையும், சுகாதார அமைப்புகளையும் காப்பாற்றுவதற்கான நம் கையில் உள்ள முதல் அம்ச பாதுகாப்பு.

தண்ணீர் மற்றும் சோப்புடன் கை கழுவுதல் மூலம் நோய்க் கிருமிகளை அழிக்க முடியும். ஆனால் போதுமான அளவு நீர் இருத்தலை உறுதிசெய்யவேண்டும். தேசிய மற்றும் உலக அளவில் நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து உலக நாடுகள் கடைபிடிக்க வேண்டிய 5 அம்சங்களை உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது;

  • அனைவருக்கும் தண்ணீர், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் கிடைக்கச் செய்தல், ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல்
  • அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைந்த முறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவது
  • நீர், சுகாதாரம் ஆகிய அமைப்புகள் நெகிழக்கூடியவை மற்றும் நிலையானவை என்பதை உறுதி செய்தல்
  • இந்த நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், நாடுகளை ஆதரிப்பதற்காக நிதி திரட்டுவதற்கு முன்னுரிமை அளித்தல்
  • துல்லியமான தகவல்களை வெளிப்படையான முறையில் வழங்குதல்

ஆகியன பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details