தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொச்சியில் 'வாட்டர் மெட்ரோ' திட்டம்: தொடங்கி வைத்த கேரள முதலமைச்சர் - water metro project

திருவனந்தபுரம்: கொச்சியில் வாட்டர் மெட்ரோ திட்டமானது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வருமென கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

pinarayi vijayan

By

Published : Sep 4, 2019, 11:33 PM IST

கொச்சி மாநகரில் மெட்ரோ ரயில் நிலைகளை நீர்வழி ஆதாரங்கள் மூலம் இணைக்கும் 'வாட்டர் மொட்ரோ' திட்டத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ரூ.747 கோடி செலவில் உருவாகிவரும் இந்தத் திட்டத்தின் முதல் வாட்டர் மெட்ரோ நிலைய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில், கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன்,மத்திய இணை நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இதில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.

அப்போது பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "வாட்டர் மெட்ரோ போன்ற நீர்வழிப் போக்குவரத்து திட்டமானது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. இந்த திட்டமானது படிப்படியாக பல்வேறு கட்டங்களில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

அந்த வகையில், வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், வாட்டர் மெட்ரோவுக்கான முதல் கட்டம் செயல்பாட்டிற்கு வரும்" என்றார்.

இது கொச்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details