தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க பெல்! - வாட்டர் பெல்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பள்ளிகளில் தண்ணீரை குடிக்க பெல் அடிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Water Bell Scheme To Improve Drinking Water Habits In School Students

By

Published : Nov 15, 2019, 9:54 AM IST

'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவனின் வாக்கு. அதன்படி பார்த்தால் உலகு மட்டுமின்றி உடலும்தான். நம் உடலின் இயக்கங்களுக்கு தண்ணீர் அத்தியாவசியமானது.

தண்ணீரின் தேவை மனித உடலுக்கு அவசியம் என்பதை உணர்ந்த கேரள அரசு அதற்காக ஒரு திட்டத்தையே வகுத்துள்ளது.

தண்ணீர் பெல்

அத்திட்டத்தின்படி, கேரளாவில் பள்ளி மாணவ-மாணவிகளை தண்ணீர் குடிக்க வைக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பாடவேளைகளில் நேரம் ஒதுக்கி தண்ணீர் பருக வைக்கிறார்கள் ஆசிரியர்கள். பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களையும் தண்ணீர் பாட்டிலை வீட்டிலிருந்து எடுத்து வரச்சொல்லி 'தண்ணீர் பெல்' என்று பெல் அடித்து பாட வேளைகளில் தண்ணீர் அருந்துவதற்கு அறிவுறுத்துகின்றனர்.

இந்தத் தண்ணீர் பெல் ஒரு நாளைக்கு மூன்று முறை அடிக்கப்பட்டு மாணவர்கள் தண்ணீர் குடிக்கச் செய்கின்றனர். இந்தத் திட்டம் பெற்றோர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க...தாய்-சேய் இறப்பு விகிதக் குறைப்பில் இந்தியாவின் பங்கு என்ன?

ABOUT THE AUTHOR

...view details