நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் சத்திஸ்கர் மாநிலத்தின் சுர்குஜா தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ரேணுகா சிங். பழங்குடியினர் நலன் துறையில் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர், முதன் முறையாக பதவியேற்றபின் சத்திஸ்கர் வந்துள்ளார். இவரை வரவேற்க ராய்ப்பூரில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு பழங்குடியின கலைஞர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர் வந்த உடன் ஆடி பாடி மகிழ்ந்து தங்களது அன்பினை வெளிப்படுத்தினர். அவர்கள் ஆடுவதைக் கண்டு தன்னையே மறந்து, அவர்களுடன் சேர்ந்த ரேணுகா ஆடி மகிழ்ந்தார்.
மத்திய இணை அமைச்சர் ரேணுகா பழங்குடியினருடன் கொண்டாட்டம்! - பாஜக அலுவலகம்
ராய்ப்பூர்: பாஜக அலுவலகத்தில் வரவேற்க வந்த பழங்குடியின மக்களுடன் மத்திய இணை அமைச்சர் ரேணுகா சிங் ஆடி மகிழ்ந்தார்.

மத்திய இணை அமைச்சர் ரேணுகா சிங்
மத்திய இணை அமைச்சர் ரேணுகா பழங்குடியினருடன் சேர்ந்து ஆடிய தருணம்!
இந்த விடியோ காட்சி தற்போது சமூகவளைதளங்களில் வைரலாகி வருகிறது.