மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்க அஜித் பவார் ஆதரவளித்தார். இதனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குடும்பத்தில் புயல் வீசியது. இந்த புயல் இன்று (நவ.27) முடிவுக்கு வந்ததுள்ளது. அஜித் பவார் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்ள வந்த போது அவரை சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனா, தேர்தலுக்குப் பின்னர் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அக்கட்சிகளின் ஆதரவைப்பெற பாஜகவுடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்டது.
அஜித் பவாரை கட்டி அணைத்த சுப்ரியா சுலே.! கிளர்ச்சி ஓவர்..! - மகாராஷ்டிரா தேர்தல்
மும்பை: அஜித் பவாரின் செய்கையால் சரத் பவாரின் குடும்பத்தில் புயல் வீசிய நிலையில் தற்போது அந்த கிளர்ச்சி முடிவுக்கு வந்துள்ளது.

WATCH: Sule hugs 'rebel' cousin Ajit Pawar at MLAs' swearing-in
இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உறவினர் அஜித் பவாரை வலையில் விழச்செய்த பாஜக அவரின் ஆதரவுடன் திடீர் திருப்பமாக ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சி மூன்றே நாளில் முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: 10 நாட்களுக்குள் பதவி விலகிய முதலமைச்சர்கள்!