காங்கிரஸ் கட்சி சார்பாக டெல்லியில் பொதுகூட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுரேந்திர குமார் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். கூட்டம் முடிந்து தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் போது, 'பிரியங்கா காந்தி வாழ்க' என முழங்குவதற்கு பதில் 'பிரியங்கா சோப்ரா வாழ்க' என முழங்கினார்.
இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், தன்னை திருத்தி கொண்ட அவர் மன்னிப்பு கேட்டார். இதனை ட்விட்டரில் விமர்சித்த அகாலிதள கட்சியின் எம்.எல்.ஏ. மஞ்ஜிந்தர் சிங், "காங்கிரஸ் கட்சியின் பொதுகூட்டங்களில் பிரியங்கா சோப்ரா வாழ்க என முழங்கப்படுகிறது. இதன்மூலம், கட்சியே பப்புவாகிவிட்டது" என பதிவிட்டிருந்தார். சுரேந்திர குமாரை பலர் ட்விட்டரில் கலாய்த்துவருகின்றனர்.