லடாக்கின் லே பகுதிக்கு அருகே உள்ள நிமு பகுதிக்கு நேற்று திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஓடும் சிந்து நதிக்கு பூஜை செய்து வழிபட்டுள்ளார்.
அதன் காணொலி தற்போது வெளியாகியுள்ளது. சன்ஸ்கார் மலைத் தொடரில் உள்ள நிமு பகுதி சிந்து நதிக்கரையை ஒட்டியுள்ள நிலையில், சிந்து நதிக்கரையிலிருந்து நதிக்கு மலர் தூவி வழிபட்டார்.
சிந்து நதியை வழிபட்ட பிரதமர் மோடி முன்னதாக, இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் அங்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று திடீர் பயணம் மேற்கொண்டார்.
முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவணே ஆகியோரும் பிரதமருடன் சென்றனர். அங்கு பாதுகாப்பு வீரர்களிடம் பேசிய மோடி, கல்வான் தாக்குதலில் காயமடைந்த வீரர்களையும் சந்தித்து அவர்களின் நலம் விசாரித்தார்.
இதையும் படிங்க:ஆக்கிரமிப்பு சக்திகளின் காலம் மலையேறிவிட்டது - சீனாவைச் சீண்டிய பிரதமர் மோடி