தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூளையில் அறுவை சிகிச்சை செய்தபோது பியானோ வாசித்த சிறுமி! - அறுவை சிகிச்சை செய்தபோது பியானோ வாசித்த 9 வயது சிறுமி

லக்னோ: மத்தியப் பிரதேசத்தில் சிறுமியின் மூளையில் சிக்கலான அறுவை சிகிச்சை செய்தபோது, அவர் பியானோ வாசித்த காணொலி வைரலாகப் பரவிவருகிறது.

பியானோ
பியானோ

By

Published : Dec 14, 2020, 6:51 AM IST

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அறுவை சிகிச்சையின்போதே, பயமின்றி செய்த செயல் ஆச்சரியத்தையும், அதேசமயம் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

மூளையில் அறுவை சிகிச்சை செய்தபோது பியானோ வாசித்த சிறுமி

குவாலியரில் உள்ள பிர்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 வயதான சிறுமி ஒருவர், பல நாள்களாக மூளையில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்டுவந்துள்ளார். இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்திட மருத்துவர்கள் முடிவுசெய்தனர்.

சிகிச்சையின்போது, சிறுமி பயப்படாமல் இருந்திட மருத்துவர்கள் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்தது மட்டுமின்றி சிறுமி வாசிக்க பியானோ ஒன்றையும் வழங்கினர். மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையின்போது, சிறுமி பியானோ வாசித்த நிகழ்வு பலரைக் கவர்ந்துள்ளது. சிறுமி பியானோ வாசிக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details